மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் லஞ்ச ஒழிப்புத்றையில் அளித்துள்ள புகாரில், ‘‘ 2021 முதல் 2023 ம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் வாங்க, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் மின்மாற்றிகள் வாங்கியதில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

டெண்டர் விதிகளை பின்பற்றாமல், வெளிப்படைத் தன்மை இல்லாமல் டெண்டர் விட்டதே இழப்பிற்கு காரணம். ஏனவே சுமார் 400 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதற்கு காரணமான அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal