தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று மதியம் வலுப்பெற்று, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal