தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. அங்கம் வகித்தாலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தி.மு.க.விற்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிறார். இதற்கு பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
வி.சி.க.வின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘நான்கு வருடம் திரைத்துறையில் இருந்தவர் துணை முதலமைச்சர் ஆகும்போது, நாற்பது வருடம் அரசியலில் இருப்பவர் துணை முதல்வர் ஆகக்கூடாதா?’ என உதயநிதிக்கு எதிராக நேரடியாக விமர்சனத்தை வைத்தார். அப்போது, வி.சி.க.வில் இருந்தே சிலர் ஆதவ் அர்ஜுனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
அப்போது பேசிய திருமாவளவன், ‘சிலர் கூட்டணிக் கட்சியின் நலன் கருதி பேசுகிறார்கள். ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வின் எதிர்கால நலன் கருதி பேசியிருக்கிறார்’ என ஆதவ்வை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.
இந்த நிலையில்தான் டாக்டர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் பங்கேற்பது குறித்து செய்திகள் வெளியானது. உடனடியாக ‘த.வெ.க.வுடன் வி.சி.க. கூட்டணி வைப்பதற்கான முன்னோட்டம்’ என செய்திகள் வெளியான போது, நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டார் திருமாவளவன்.
ஆனாலும், நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திருமா பங்கேற்பதில் உறுதியாக இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா தி.மு.க.விற்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனத்தைப் வைப்பதன் பின்னணியில் சீனியர் அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி நம்மிடம் தனது அடையாளங்களை மறைத்துப் பேசிய உடன் பிறப்பு ஒருவர், ‘‘சார், ‘கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைப் போல் 2026 இருக்காது. தற்போது இருக்கும் கூட்டணி அப்படியே தொடருமா? என்பதே கேள்விக்குறி’ என அந்த சீனியர் அமைச்சர் ஓபனாக பேசினோர்.
தவிர, தி.மு.க.வை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பிரபல யுடியூபர் இவரும் ரகசிய தொடர்பில் இருப்பதாக தலைமைக்குப் புகார் சென்றது. எம்.பி.யாக இருக்கும் அவரது மகன் அந்த யுடியூபரை தனியாக சந்தித்த புகைப்படமும் வெளியானது. இந்த நிலையில்தான் கட்சியின் தலைமை கடுமையாக எச்சரித்ததால், சில நாட்கள் நிலைகுலைந்துப் போயிருந்தார். கட்சித் தலைமையும், சரி… நடந்தது நடந்ததாக இருக்கட்டம்… இனியாவது கட்சித் தலைமைக்கு எதிரானவர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருக்கட்டும் என்று விட்டுவிட்டது.
இந்த நிலையில்தான் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வி.சி.க.வின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘வி.சி.க.வை தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றும்’ முயற்சியில் இறங்கியிருக்கிறார். தவிர, சமயம் கிடைக்கும் போதேல்லாம், தி.மு.க. மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகிறது. இவரும், அந்த சீனியர் அமைச்சரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவருக்கு மறைமுகமாக சீனியர் உதவி செய்தாக தகவல்கள் வருகிறது’’ என்றனர்.
எல்லாம் அந்த ‘உச்சி’ பிள்ளையாருக்கே வெளிச்சம்..!