புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் நண்பர் விஜய். அவரது தீர்மானத்தை பார்க்கும் போது, தி.மு.க.,வில் போய் சேர்ந்து கொள்ள சொல்லலாம் போல் இருக்கிறது’ என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

சென்னை, கமலாலயத்தில் நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: ‘‘ இப்போது புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் நண்பர் விஜய். அவர் சில தீர்மானங்கள் போட்டு இருக்கிறார். தீர்மானத்தை பார்க்கும் போது, தி.மு.க.,வில் போய் சேர்ந்து கொள்ள சொல்லலாம் போல் இருக்கிறது. தி.மு.க., சொன்னதையே சொல்கிறார். நீட் தேர்வு கொண்டு வந்தது யார்? 2010ல் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி ஆட்சி தான். 2013ல் முதல் முறையாக நீட் தேர்வு நடத்தியது யார்? ஜெயலலிதா ஒரு வருடம் விலக்கு கேட்டார்.

இரண்டாவது வருடம் விலக்கு கேட்ட போது, சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வை நடத்த வேண்டும் என கூறியது. மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று கூறும் விஜய் எப்படி பா.ஜ.,வின் ‘பி’ டீம் ஆவார்?

முதலில் சீமானை கூறியவர்கள், இப்போது விஜயை கூறுகிறார்கள். இத்தனை ‘பி’ டீம்களை கட்சி தாங்காது. தி.மு.க.,வின் நிலைமை தவளை தண்ணீருக்குள் இருந்த மாதிரி உள்ளது. ஏதாவது ஒன்று கிடைக்காதா? தல கிடைக்காதா? அஜித் கிடைக்க மாட்டாரா? என்று தி.மு.க., முயற்சி செய்து வருகிறது’’ இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal