தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் விரைவில் தனி சேனல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் தனி சேனலை.. செய்திகளுக்காக அவர் ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
நேரடியாக தொடங்காமல் அவருக்கு நெருக்கமான சிலர் மூலம் இந்த சேனல் நடத்தப்படலாம் என்கிறார்கள். விஜய் சமீபத்தில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் விஜய் நடந்த விதத்தை சேனல்கள் ஒளிபரப்பிய விதத்தை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக தனக்கு எதிராக கடுமையான நெகட்டிவ் நரேட்டிவ் செய்யப்படுவதாக விஜய் நினைப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய் தனது அரசியல் எதிர்காலம் கருதி ‘தளபதி’ என்ற செய்தி சேனல் ஒன்றை தொடங்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இது போக அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை, அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது ஜான் ஆரோக்கியசாமிதான். இப்போது விஜய்க்கு பின்னணியில் இருக்கும் நபரும் ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர் மைண்ட்தான். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.
தற்போது விஜய்க்கு இவர்தான் தேர்தல் பணிகளை செய்கிறார். இதனால் ஜெகன் மோகனை போலவே நடிகர் விஜய் அடுத்த வருடம் தமிழ்நாட்டில் நடைபயணம் தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் விஜய் நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் பேச்சு.. அவரின் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் ஆகியவற்றை பார்த்தவர்களுக்கு இது எங்கேயோ பார்த்த ஸ்டைல் போல இருக்கிறதே என்று தோன்றலாம். அது வேறு யாருமல்ல.. ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஸ்டைலைத்தான் விஜய் பின்பற்றுகிறார் என்ற வாதம் வைக்கப்பட்டு வருகிறது.
அவரை போலவே அடுத்த வருடம் விஜய் நடைபயணம் மேற்கொள்ள போவதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் விஜய் பிரபலமாகி இருந்தாலும் விஜய் கட்சி பிரபலம் இல்லை. விஜய் கட்சிக்கு என்று வார்டுகள், கிளைகள் ரீதியாக நிர்வாகிகள் இல்லை. இதை எல்லாம் உருவாக்க பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்கு ஒரு ஷார்ட் கட் உள்ளது. அது நடைபயணம். இதற்காக நடைப்பயணத்தை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயின் ஸ்டைல், பேச்சு.. நடை எல்லாம் அப்படியே ஜெகன் மோகன் ஸ்டைலில் இருக்க காரணம்.. ஜான் ஆரோக்கியசாமிதான். ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். இப்போது விஜய்க்கும் நடைபயணம் திட்டத்தை அவர் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது