தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கபப்ட்டுள்ளது.

இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

விமான நிலையங்களில் செக்-இன் செய்வது தாமதமாவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்காக வருந்துகிறோம். விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக தங்கள் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal