செஞ்சி தொகுதியைப் பொறுத்தவரை அனைத்து சமூக மக்களிடமும் நல்ல முறையில் பழகி வரும் செஞ்சி மஸ்தான் பதவி பறிப்பை அந்தத் தொகுதி மக்களும், மஸ்தான் ஆதரவாளர்களும் ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதே களநிலவரமாக இருக்கிறது.
சனிக்கிழமை இரவுதான் பதவியி¢இருந்து நீக்கப்பட்டோம் என்ற தகவல் தெரியவர, சிறிது சோர்வாக இருந்த மஸ்தான் மீண்டும் தனது களப்பணியை எந்த தொய்வின்றி செய்ததை அந்தத் தொகுதி மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஞாயிற்றுக் கிழமை காலை ஏற்கனவே திட்டமிட்ட படி மிலாது நபி நிகழ்வில் கலந்து கலந்து கொண்டு 5000க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினார்.
அவரது இல்லத்தினை சுற்றி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு, அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு வருத்தத்தோடு காணப்பட்டனர். அங்கு திரண்டிருந்து பெண்களில் ஒருவர் வருத்தம் அடைய, உடனடியாக அவருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. எப்போதும் போல் செஞ்சி மஸ்தான் அடுத்தவர்களுக்கு தைரியல் சொல்லி வந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் பதவி போன பிறகும் மக்களுக்கான சேவை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.
தொகுதி நிலவரம் இப்படி இருக்கும்போது, அனைத்து தரப்பு மக்களிடமும் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில் தொடர்ந்து அக்கறை காட்டி வரும் மஸ்தானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை, சிறுபான்மை சமூகத்தினரே ரசிக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை சிதறாமல் பார்த்துக்கொண்டவர் செஞ்சி மஸ்தான். இந்த நிலையில்தான் செஞ்சி மஸ்தான், மற்றும் மனோ தங்கராஜின் நீக்கம் தி.மு.க. & பா.ஜ.க. நிலைப்பாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையே ‘கலைஞரும் சிறுபான்மையினரும்’ என்கிற தலைப்பில் செஞ்சி மஸ்தான் தயாரித்து வந்த நூலை சட்டசபை நெருங்கும் சமயத்தில் வெளியிட ஆயத்தமாகியிருந்தார். தவிர அயலக வேலை வாய்ப்பு துறையின் வாயிலாக அமைச்சராக இருந்தபோது சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர ஆயத்தமாகியிருந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்று தி.மு.க. மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், சிறுபான்மையினர் மக்கள் மகிழ்ச்சியை இழந்திருப்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறார்கள்!