உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட பிறகு, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் அவருக்கு நேரில் வாழ்த்துக்களைக் கூறினார்கள். சிலர் வாழ்த்துக்களைப் பெற்றனர்.

‘‘துணை முதல்வர் உதயநிதி எனக்கு துணையாக அல்ல, நாட்டு மக்களுக்கு துணையாக இருக்க போகிறார்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த கவுன்சிலர் வீரமணிகண்டன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வீரமணிகண்டன் உதயநிதி ஸ்டாலினின் தீவிர விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal