தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (FIR ) பதிவு செய்து விசாரிக்குமாறு பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்துக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் (FIR ) பதிவு செய்ய பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஜனதிகர் சங்கர்சா பரிஷத் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் நிர்மலா சீதாராமன் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்திருப்பதாக புகார் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்து விசாரிக்குமாறு பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை அதிகாரிகள், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக தேசியத் தலைவர்கள், அப்போதைய பாஜக கர்நாடக தலைவர் நளின் குமார் கட்டீல், பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது ஜனாதிகர் சங்கர்ஷ் பரிஷத் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், எப்ஐஆர் பதிவு செய்ய பெங்களூரு திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாகப் பேட்டி அளித்துள்ள மனுதாரர் ஆதர்ஷ் ஐயர், புகாரை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு பெங்களூரு திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது என்றார். இந்த வழக்கில் மனுதாரர் ஆதர்ஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலன் வாதிட்டார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal