மகாத்மா காந்தி பிறந்த நாளில் கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை திருமாவளவன் அழைத்திருப் பதுதான் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இந்தத் தகவல் அமெரிக்காவில் இருக்கும் முதல்வருக்கு தெரிவிக்க, அவர் அசால்டாக ஒரு பதிலை கூறினாராம். அதுதான் தி.மு.க.வினருக்கே வியப்பாக இருக்கிறது.

அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக முடிவெடுப்பது பற்றி அறிவாலயத்தில் உள்ள மூத்த உடன் பிறப்பு ஒருவரிடம் பேசினோம்.

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரி உள்பட தி.மு.க. 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றதற்கு காரணம், கூட்டணி பலம்தான். அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தற்கும் பலமில்லாத கூட்டணிதான். தி.மு.க. மோடியே நினைத்தாலும் கூட்டணியை உடைத்து விட முடியாது ; அந்தளவுக்கு விட்டுக் கொடுத்து கூட்டணியை கெட்டியாக வைத்திருப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சமயோஜித அரசியல். அதனால், திமுக கூட்டணி பலத்துக்கு முன்னால் அதிமுக, பாஜக போடும் அரசியல் கணக்குகள் தப்பாகிக் கொண்டே இருக்கின்றன.

அதனால்தான், கூட்டணியில் இருந்து கொண்டே, திமுக அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிராக விமர்சனம் வைப்பதும், தற்போது அக்கட்சி நடத்தும் மது ஒழுப்பு மாநாட்டுக்கு திமுகவின் நேரடி எதிரியான அதிமுகவை அழைப்பதுமான திருமாவின் சமீபகால போக்கு, அதிமுக, பாஜகவை நிமிர்ந்து உட்கார வைத்துள்ளது.

அதிலும் திருமா கொடுத்த 2 ஸ்டேட்மென்ட் திமுகவை டென்சன் ஆக்கி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணித்து வரும் திருமாவளவன் கூறியிருப்பது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அதிமுக வரலாம். எந்த கட்சியாக இருந்தாலும் வரலாம் என்று திருமா ஓபன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இலவசங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, மது ஒழிப்பு திட்டங்களை கொண்டு வரலாம். மது ஒழிப்பு.. மது விலக்கு கொண்டு வந்தால் போதும். அந்த நிதி இலவசங்களை கொடுக்க வேண்டியது இல்லை என்றார். இந்தத் தகவல்கள் உடனடியாக அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஸ்டாலின், ‘அவர்கள் நடத்தும் மாநாட்டுக்கு அவர்கள் யாரை வேண்டுமானாலும் அழைக்க உரிமை இருக்கிறது. அழைத்துக் கொள்ளட்டும். இதை நாம் தடுக்க முடியாது ; நமது வேலையும் அது இல்லை. நமக்கு நிறைய வேலை இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் இதில் தலையிட விரும்பவில்லையாம். விசிக வேறு ஆப்ஷனை பார்த்தல் அதை தடுக்கும் விருப்பம் ஸ்டாலுனுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. உதயநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போதும், தந்தை வழியில், ”அழைப்பது அவர்கள் விருப்பம்” என்று அழுத்த மாகச் சொன்னார். அதாவது, ”கூட்டணியிலிருந்து திருமா வெளியேறினால் வெளியாறட்டும் ; எங்களுக்கு கவலை இல்லை” என்கிற தொணியில் வந்த கமெண்ட் இது என்கிறார்கள் திமுகவினர்.

அதாவது, திருமாவளவன் திமுக கூட்டணியோடு முரண்பட்டால், திருமா வெளியேறுவார். திருமாவை தொடர்ந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறும். திமுக கூட்டணி கலகலத்துப் போகும் என்று கணக்கிட்டுத்தான் அதிமுகவும், பாஜகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றன. ஆனால், திருமா போகட்டும் என்கிற மனநிலையில்தான் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

காரணம், பா.ம.க.வும், தி.மு.க.வில் இணைக்க வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மூத்த தலை நடத்திய பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறது. இந்தத் தகவல் ‘மாப்பிள்ளை’க்கும் தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த தகவல்கள் திருமா ஸ்மெல் செய்த பின்னர்தான் மது ஒழிப்பு மாநாட்டிற்கு தேதியே குறித்திருக்கிறார். தவிர வரவிருக்கிற சட்டன்றத் தேர்தலில் பக்காவான வியூகத்தை வகுத்து வருகிறாராம் உதயநிதி ஸ்டாலின். இந்த வியூகம் இரண்டாவது முறை தி.மு.க. அரியணையில் அமர உதவும் என நம்புகிறார் மு.க.ஸ்டாலின். அதனால் ஓடும் எப்போதுமே ஓடும் குதிரையில் சவால் செய்யும் பா.ம.க. உள்ளேயும், வி.சி.க. வெளியேயும் போகும். இது வடமாவட்டங்களில் தி.மு.க. விற்கு பலம் சேர்க்கும் என்ற கணக்கைப் போடுகிறார் மு.க.ஸ்டாலின்’’ என்றனர்.

சினிமாவை விட அரசியலில் ‘ட்விஸ்ட்’ அதிகமாக இருக்கும் போல..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal