திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு வெளியே நடந்த குற்றங்களுக்கு இந்தியாவில் உள்ள சொத்துக்களை முடக்க ‘பெமா’ சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் அதன் அடிப்படையில்தான் தற்போது அவருக்கு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு ரூ. 89.19 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்நிய மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதித்து சொத்துக்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.