முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் கணவர் டாக்டர் பாலாஜியை மிகச் சிறந்த இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘அவுட் லுக்’ பத்திரிகை தேர்வு செய்திருக்கிறது.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர் என்றே சொல்லலாம். தற்போது முதல்வர் ஸ்டாலின் வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறார். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து தனது கல்வி நிறுவனங்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நீலகிரில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் தனது கல்வி அறக்கட்டளை மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிலையில்தான் இவரது கணவர் டாக்டர் பாலாஜி மருத்துவத்துறையில் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பணியாற்றக்கூடியவர். தொடர்ந்து மூன்றவாது முறையாக ‘அவுட் லுக்’ பத்திரிகை தென் இந்தியாவின் சிறந்த இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுனராக தேர்வு செய்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

டாக்டர் பாலாஜியின் மருத்துவ சேவை தென்னிந்தியாவிற்கு மிகவும் தேவை..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal