சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற போது ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அதன்படி சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் அதிகாலையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து கொலை அரங்கேறியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். குறிப்பாக சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற போது ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அதன்படி சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்தார். அந்த வகையில் கூலிக்கு ஆட்களை அனுப்பி கொலைகளை செய்து வரும் கூலிப்படை தலைவர்களின் பட்டியலை எடுத்து ரவுடிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஏ பிளஸ், ஏ மற்றும் பி கேட்டகிரியில் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை டி.பி.சத்திரத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரோஹித் ராஜ். இவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும்போது துப்பாக்கியால் அவரை சுட்டு பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து வலியால் துடித்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த போலீசாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ரோஹித் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal