மதுபான கொள்கை வழக்கில் , ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுது.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.இதில் நடந்துள்ள பணமோசாடி தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியானதையடுத்து, டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவும் கடந்த மே 21-ம் தேதி தள்ளுபடியானது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமின் மனுவை கடந்த 6-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்த வக்கில் இன்று (ஆக.09) , மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ரூ.10 லட்சம் செலுத்துவதோடு, பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.