தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அமைச்சரவையிலும் மாற்றம் நடந்த பிறகு அமெரிக்க செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது. உடன் உயர்அதிகாரிகள் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதே சமயம் உடல் நலன் குறித்த மருத்துவ பரிசோதனைக்காகவும் ஸ்டாலின் செல்கிறார் என்றும் தகவல் பரவியிருந்தன. ஆனால், அந்த பயணத்திட்டம் சற்று மாற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வருகின்றன. அதாவது, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு அதன்பிறகு வெளிநாடு செல்லலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால். முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் அரசியல் களத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும்.

ஆனால் ஆட்சி மீது சில விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்களை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றப்படும். சீனியர் அமைச்சர்கள் 4 பேர் மீது புகார் சென்றுள்ளது. அவர்கள் மாற்றப்படலாம். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், கட்சிக்கு வெளியே அதிகாரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ஸ் கூடிக்கொண்டே வருகிறது. உதயநிதியை துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்து விட்டார்.

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆட்சி நிர்வாக பொறுப்புகள் அவருக்கு முழுமையாக வழங்கப்படலாம் என்கிறார்கள். அதை மனதில் வைத்தே சமீபத்தில் செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றிருக்கிறது’’என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal