கரூரில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவியதாக சென்னையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள் மதுரையிலும் ஒரு முன்னாள் அமைச்சர் நில மோசடி விவகாரத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் விலக்களிக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த விவகாரம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ‘‘மதுரை மாவட்டம் பரவை 2வது பிட் கிராமத்தில் அரசின் நில சீர்திருத்த திட்டத்தின் கீழ் சில உச்ச வரம்பு சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பல சர்வே எண்களில் உள்ள கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் இடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பாகவும், விதிகளை மீறியும் நில உச்ச வரம்பில் விலக்களிக்கப்பட்ட நிலங்கள் தனியார் பெயர்களில் பட்டால மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும், இதில் இடங்களை வாங்கிய சிலர் கட்டிடங்களை கட்டி வருவதாகவும், இதற்கு பத்திரப்பதிவு அதிகாரிகள், வருவாய்துறை, நகர் ஊரமைப்பு துறை உயர் அதிகாரிகள் மற்றும் பரவை பேரூராட்சி அதிகாரிகள் துணை போயிருக்கின்றனர். எனவே, அவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வடக்கு வட்டாட்சியர் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு ஆய்வறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளார்.

அதில், மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் பரவை 2வது பிட் அதிசயம் அருகில் ஆர்.ஜே.டி. நகர் மற்றும் ராஜா நகர் சர்வே எண்களின் 109/2சிமற்றும் 111/2 உட்பிரிவவைச் சேர்ந்த நிலங்கள் நில உச்ச வரம்பில் இருந்து விலக்களிக்கப்பட்டவை. மேற்படி விலக்களிக்கப்பட்டநிலங்களை பிலத் தணிக்கை மற்றும் கிராம கணக்குகளை ஆய்வு செய்ததில் நில சீர்திருத்த சட்டத்தினை மீறி, விதி மீறல் நடந்திலுக்கிறது என வட்டாட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தவிர, இந்த நிலங்கள் தொடர்பான வாக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என கூறப்பட்டருக்கிறது.

இதன் பின்னணியை விசாரித்தால்தான் அமைச்சர் ஒருவரின் தலையீடு இருப்பது தெள்ளத் தெளிவாகிறது. அதாவது, இந்த நிலத்தில் ஆர்.ஜே.டி. நகர் மற்றும் ராஜா நகர் அமைக்கப்பட்டு பிளாட்கள் போடப்பட்டிருக்கிறது. அமைச்சர் தன்னுடைய மகனின் பெயரில் ஆர்.ஜே.டி. நகரை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தவிர, வட்டம் பரவை பேரூராட்சியில் வார்டு எண் -12 ஆர்.ஜே.டி. நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30.00 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அவசர அவசரமாக தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டிக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகவும் நீதிமன்றப் படியேறியிருக்கின்றனர். மேலும், அமைச்சர் புத்லூத்துரில் அமைச்சர் வீட்டிற்கு செல்வதற்கு அடுத்தவர் நிலத்தில் ரோடு போட்டது தொடர்பாகவும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. மேலும், அ.தி.மு.க. அலுவலகம் அமைக்க இடம் வாங்கி அடிக்கல் நாட்டியதோடு சரி, அந்தப் பணியும் முழுமையாக நடக்கவில்¬ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்புகின்றனர் மதுரை வாசிகள்.

ஏற்கனவே, நில மோசடி விவகாரத்தில் கரூர் விஜயபாஸ்கர் சிக்கியிருக்கும் நிலையில், மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் அடுத்து சிக்க இருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal