‘தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது’ என ‘ஆக்சிஸ் மை இண்டியா’ தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 400 இடங்களை வெல்லும் என, ‘ஆக்சிஸ் மை இண்டியா’ கருத்துக்கணிப்பு வெளியிட்டது. ஆனால், பா.ஜ.,வால் 294 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது, ‘ஆக்சிஸ் மை இண்டியா’ தலைவர் பிரதீப் குப்தா கண்ணீர் விட்டு அழுதார். இது சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், பிரதீப் குப்தா கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என கூறுவது குழந்தை தனமானது. பங்குசந்தைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் மீது உள்ள களங்கத்தை துடைப்போம்.

2013 முதல் இதுவரை 65 தேர்தல்களுக்கு கருத்துக்கணிப்பு வெளியிட்டிருக்கிறோம். இதில் 61 தேர்தல்களுக்கு சரியாக கணித்திருக்கிறோம். தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான செலவுகளை ஊடகங்கள் முழுமையாக வழங்குவது கிடையாது; நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகளை நடத்த பெருந்தொகையை செலவிடுகிறோம்; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal