பெண் காவலருடன் உல்லாசமாக இருந்த டி.எஸ்.பி.க்கு உத்திரபிரதே மாநில காவல்துறையில் விநோதமான தண்டனை வழங்கப்பட்டிருப்பதுதான் பேசுபொருளாகியிருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பியாக இருப்பவர் கிரிபா சங்கர் கனுஜியா. இவர் போலீஸ் துறையில் இணைந்து படிப்படியாக ப்ரோமோஷன் பெற்று டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த 2021 ஜுலை மாதம் கிரிபா சங்கர் கனுஜியா உன்னாவ் மாவட்டம் பிகாபூரில் சர்க்கிள் ஆபிசராக பணியாற்றி வந்தார். இந்த சமயத்தில் திடீரென்று அவர் எஸ்பியிடம் விடுமுறை கோரினார். அதாவது தனது குடும்பத்தில் பிரச்சனை உள்ளது. இதனால் விடுமுறை வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து எஸ்பி அவருக்கு விடுப்பு வழங்கினார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் கிரிபா சங்கர் கனுஜியாவின் மனைவி பயந்துப்போனார். அவரது தனிப்பட்ட செல்போன் எண் மற்றும் போலீஸ் சார்பில் வழங்கப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது ‘ஸ்விட்ச்ஆப்’ என்று வந்துள்ளது. இதனால் தனது கணவர் மாயமாகி உள்ளார். அவரை கண்டுபிடித்து தரும்படி எஸ்பியிடம் கோரிக்கை வைத்தார். ஏற்கனவே கிரிபா சங்கர் கனுஜியா வீட்டில் பிரச்சனை என்று கூறி விடுப்பு கேட்டதால் எஸ்பியும் சந்தேகம் அடைந்தார். அவர் எந்த தவறான முடிவும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக தீவிரமாக தேட உத்தரவிட்டார்.
முதற்கட்டமாக போலீசார் கிரிபா சங்கர் கனுஜியாவின் செல்போனை தொடர்பு கொள்ள முயன்றனர். ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் போலீசாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அவரது செல்போன் எண் கடைசியாக எந்த இடத்தில் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டது என்பது பற்றி நெட்வொர்க் மூலம் கண்டுபிடிக்க முயற்சித்தனர். போலீசாரின் இந்த முடிவுக்கு பலன் கிடைத்தது. அதாவது கிரிபா சங்கர் கனுஜியாவின் செல்போன் எண் கான்பூரில் உள்ள ஹோட்டலில் வைத்து ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஹோட்டல் அறையில் போலீசார் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதாவது விடுமுறை எடுத்து சென்ற கிரிபா சங்கர் கனுஜியா, பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே தான் கிரிபா சங்கர் கனுஜியா டிஎஸ்பியானார்.
இந்நிலையில் தான் 3 ஆண்டுகளுக்கு பிறகு முழு விசாரணை முடிவடைந்து டிஜிபியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் கிரிபா சங்கர் கனுஜியா தனது பதவியை பயன்படுத்தி பெண் கான்ஸ்டபிளுடன் நெருக்கமாக இருந்ததும், உயரதிகாரியிடம் பொய் சொல்லி விடுமுறை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையை தொடர்ந்து டிஜிபி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது டிஎஸ்பியாக உள்ள கிரிபா சங்கர் கனுஜியாவை கான்ஸ்டபிளாக பணி இறக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். அதோடு அவர் கோரக்பூர் 26வது மாகாண ஆயுதப்படைப்பிரிவில் காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுவாக காவல்துறையில் பணியின்போது தவறு செய்பவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இல்லாவிட்டால் பதவி உயர்வு என்பது நிறுத்தி வைக்கப்படும். பதவி இறக்கம், பணி நீக்கம் என்பது அபூர்வமாக தான் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில் கிரிபா சங்கர் கனுஜியா டிஎஸ்பியில் இருந்து கான்ஸ்டபிளாக பணி இறக்கம் செய்யப்பட்டுள்ளது உத்தர பிரதேசத்தில் பேசு பொருளாகி உள்ளது.