Month: July 2025

தமிழக உரிமையை நிலை நாட்டுவோம்! திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்!

“கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜக அரசின் வஞ்சகத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி – நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்.” என திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து திமுக…

அதிமுக ‘மாஜி’ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 4 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யா…

விஜய் தாய் பற்றி விமர்சனம்! அப்பாவுவுக்கு த.வெ.க. கண்டனம்!

மதத்தை வைத்து விஜய்யின் தாயை பற்றி விமர்சனம் செய்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “விஜய்யின் அம்மா கிறிஸ்தவர். தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான். சிறுபான்மையினர்களின் வாக்கை…

இருண்ட காலத்தில் தமிழக சுகாதாரத் துறை! பாஜக கடும் கண்டனம்!

‘‘பச்சிளம் குழந்தைகளை தரையில் போடலாமா? தமிழக முதல்வர் அவர்களே? தமிழக சுகாதாரத்துறை இருண்ட காலத்திற்கு போய்விட்டதா?’’ என கடுமையான… எச்சரிக்கையான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தமிழக பா.ஜ.க.! தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெட்ஷீட்டை போட்டு உட்கார்ந்து…

ரூ.3 கோடி மோசடி வழக்கு! தேர்தல் நேரத்தில் நெருக்கடி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம்…

கலைஞரிடம் கெஞ்சினாரா காமராஜர்? சர்ச்சையை கிளப்பிய திருச்சி சிவா!

மறைந்த தலைவர்கள் பற்றி இருக்கும் போது விமர்சனத்தையும், மறைந்த பிறகு அவர்களது பெருமையையும் பேசுவது வழக்கம். ஆனால், திருச்சி சிவா காமராஜர் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதுதான் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘ காமராஜர் சாகும்போது, கருணாநிதியின் கையை…

மதுரையில் 2வது அரசியல் மாநாடு! ‘மாஸ்’ காட்டும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என் நெஞ்சில்…

கடலில் தரையிறங்கிய டிராகன்! பூமிக்கு திரும்பிய சுக்லா!

சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக 22 மணி நேர பயணத்திற்குபின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3:01 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் தரையிறங்கியது. தொடர்ந்து, சுக்லா…

‘மக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை!’ துரைமுருகன் ஓபன் டாக்!

தி.மு.க. ஆட்சி அமைந்து 4 வருடங்கள் கழித்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை புதிதாக கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான், ‘‘பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு…

குரூப் 2 பணிகளுக்கு இன்று முதல் ஆக.13 வரை விண்ணப்பிக்கலாம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பயணியிடங்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1, குரூப் 2, 2ஏ…