தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். அவரது நடிப்பில் அடுத்ததாக டோரோதி திரைப்படம் வரவிருக்கிறது. அப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் அவர் லண்டன் சென்றிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

மலையாளத்தில் நடிப்பு பயணத்தை தொடங்கி தமிழில் ஃபேமஸானவர் கீர்த்தி சுரேஷ். இங்கே ரஜினி முருகன் படத்துக்கு வெற்றிக்கு பிறகு விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி சூப்பராக நடித்தார். அந்த சூழலில் தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றிருந்தார். இதற்கிடையே ஆண்டனி தட்டில் என்பவரை நீண்ட வருடங்களாக காதலிக்கவும் செய்திருக்கிறார்.

இவர்களது திருமணம் கோவாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அதில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் கடைசியாக சத்தியவான் சாவித்திரி, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் வந்து சுமாரான வரவேற்பை பெற்றன. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டோரோதி படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்துக்கு இளையராஜாவின் இசை காரணமாக ஹைப் எகிறியிருக்கிறது. படத்திலிருந்து வெளியான முத்துமணி, கல்யாண விருந்து ஆகிய பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலிக்கின்றன. முத்துமணி பாடலில் வெள்ள புடவையில் கீர்த்தியை பார்த்த ரசிகர்கள், ‘அப்படியே தேவதை இறங்கி வந்தது மாதிரி இருக்கிறது’ என்று வர்ணிக்கிறார்கள். நிச்சயம் அப்படம் கீர்த்திக்கு பெரிய பிரேக்கை கொடுக்கும் என நம்பலாம்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் வெளிநாடுகளுக்கு செல்வதையும் குறைத்துக்கொள்வதில்லை கீர்த்தி சுரேஷ். அந்தவகையில் இப்போது அவர் லண்டன் சென்றிருக்கிறார். அதற்காக அவர் விமான நிலையத்தில் என்ட்ரி கொடுத்தபோது அங்கிருந்த ரசிகர்களும், ரசிகைகளும் அவருடன் கை குலுக்கியும், புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் மகிழ்ந்தார்கள்.

ஏற்கனவே நடிகை திரிஷா படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal