பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா, மதுரையில் வயது முதிர்வு காரணமாகக் காலமானார்.

மதுரையைச் சேர்ந்த பிரபல தமிழறிஞரும், நகைச்சுவையான பேச்சினாலும் அழுத்தமான தீர்ப்புகளினாலும் பட்டிமன்றக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை மதுரையில் காலமானார். அவருக்கு வயது 90. அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ஜெயபாய் (86). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த ஆண்டு இவருடைய மனைவி ஜெயபாய் காலமானா.ர் இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா வெள்ளிக்கிழமை (11.09.2026) காலமானார்.

பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையா-வின் நகைச்சுவையான பேச்சுகளும் அவருடைய பட்டிமன்ற தீர்புகளும் பட்டிமன்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாலமன் பாப்பையா-வின் மரணம் தமிழ் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன் கம்பீரமான குரலாலும், அள்ள அள்ளக் குறையாத நகைச்சுவையினாலும், எளிய இனிய தமிழினாலும் கோடிக்கணக்கான உலகத் தமிழர்களின் வீடுகளுக்குள்ளும் இதயங்களுக்குள்ளும் நிறைந்திருந்த பட்டிமன்ற நாயகன் பேராசிரியர் சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார் என்ற செய்தி தமிழ் உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை சாத்தங்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி தலைமுறை தலைமுறையாய் மாணவர்களுக்குத் தமிழ் அமுதூட்டியவர். பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகத் திறமையால் மிளிர்ந்தவர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலக நாடுகள் பலவற்றிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களை நடத்தி, தமிழ் மொழியின் அழகையும் நகைச்சுவையையும் எல்லைகள் கடந்து கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. ‘சிவாஜி’, ‘பாய்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துத் திரைத்துறை ரசிகர்களின் அன்பையும் பெற்றார்.

இவரது ஈடு இணையற்ற தமிழ் சேவையைப் போற்றி, தமிழக அரசு 2000-ல் ‘கலைமாமணி’ விருதையும், இந்திய மத்திய அரசு 2021-ல் ‘பத்மஸ்ரீ’ விருதையும் வழங்கி கௌரவித்தது. மேடைகளில் அவர் எழுப்பும் சிரிப்பொலியும், நயமான தீர்ப்புகளும் இனி ஒலிப்பதில்லை என்ற எண்ணமே தமிழ் நெஞ்சங்களை உலுக்குகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal