‘மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தூண்டுதலின் பேரில் 42 போலி வாக்காளர்களை சேர்த்த தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் தேர்தல் உதவி ஆணையாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில், ‘‘இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி கடந்த 19ம் தேதி வரைவு வாக்களார் பட்டியில் வெளியிட்டப்பட்டது..

புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 191 – மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 98 இல் 844 வாக்காளர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் அப்பகுதி தி.மு.க.வினரின் தூண்டுதலின் படி இறந்து போ 29 பேரின் பெயர்களையும், நிரந்தரமாக இடம் மாறிய 12 பேரின் பெயர்களையும், ஒரு இரட்டைப் பதிவு என 42 பேரின் பெயர்களை பாகம் எண் 98 க்கான வாக்குச் சாவடி நிலை அலுவலர் திட்டமிட்டு சேர்த்துள்ளார். ஆதலால் இத்துடன் இணைப்பில் கண்டுள்ள வரிசை எண்களில் உள்ள அந்த 42 பேர்களின் பெயர்களையும் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கிடவும்.

இந்த மோசடிக்கு துணை போன வாக்குச் சாவடி நிலை அலுவர் (பி.எல்.ஓ.) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுவதுடன், வடக்கு சட்டமன்ற தொகுதியின் பிற பாகங்களிலும் இது போன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளதா? என ஆய்வு செய்து முறையான இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்திட, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படியெல்லாம் தில்லு முல்லு செய்யுறாங்கப்பா…. இவங்கள அடிச்சுக்க முடியாது போல..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal