ஏற்கனவே கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி, ‘த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும்’ என்கிற ரீதியில் பேசியதாக சொல்லப்படுகிறடு. இந்த நிலையில்தான், ‘அதிகாரப் பகிர்வு’ குறித்து அதிரடியாக பேசிய தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறார் மாணிக்கம் தாகூர் எம்.பி.!

‘இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஐபிடிஎஸ் கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யாருக்கு ஓட்டு?” – ஐபிடிஎஸ் (IPDS) தரவு சொல்லும் தகவல். தமிழகத்தில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே” இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
