“திமுக கைக்கூலி என எங்களை விமர்சிப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று கூறிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை “ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸின் மகள் காந்தி ஆவேசமாக பேசியிருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் மகளும் கட்சி செயல்தலைவருமான ஸ்ரீகாந்தி ஆவேசமாக பேசினார். அன்புமணி ராமதாஸ் தரப்பை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்தி, “ஐயாவை (ராமதாஸ்) கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? கோட் சூட் போட்டுட்டு கார்ல வந்து இறங்குறீங்களே தம்பி அன்புமணி, அந்த கோட் சூட் யார் கொடுத்தது?” என்று கேள்வி எழுப்பினார்.
“திமுக கைக்கூலி என எங்களை விமர்சிப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று கூறிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை “ஆர்எஸ்எஸ் அடிமைகள்” என்று கடுமையாக சாடினார். ராமதாஸ் முன்னிலையில் பேசிய அவர், கட்சியை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது தலைவராக கூறுவது சரியல்ல என்று விமர்சித்தார்.“ராமதாஸ் தேர்தலுக்கு வியூகம் வகுத்துவிட்டார். யாருடன் கூட்டணி? யாருக்கு சீட்டு? எப்படி ஜெயிக்க வேண்டும் என அவருக்கு தெரியும்.
இனிமே குறுக்கே பேச யாருமே கிடையாது. காலை வாரி விடவும் யாரும் இல்லை!” என்று கூறிய ஸ்ரீகாந்தி, “சட்டமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி பெறுவது என்பது குறித்து ராமதாஸ் முடிவெடுத்துவிட்டார். ராமதாஸின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள்” என்று உறுதியாக தெரிவித்தார்.பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு பதிலாக ஸ்ரீகாந்தியை பசுமைத் தாயகம் தலைவராக ராமதாஸ் நியமித்தார். இது கட்சியில் ராமதாஸ் தரப்பின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.ஸ்ரீகாந்தியின் ஆவேசப் பேச்சு பாமகவில் உட்கட்சி மோதலை வெளிப்படையாக்கியுள்ளது. அன்புமணி தரப்புக்கும் ராமதாஸ் தரப்புக்கும் இடையேயான பிளவு ஆழமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர்.இந்த கூட்டம் பாமகவின் எதிர்கால அரசியல் உத்திகளை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 2026 தேர்தல் களத்தில் ராமதாஸின் தலைமை மீண்டும் வலுவடையும் என்று கட்சி ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
