‘‘கடந்த நான்கரை ஆண்டு காலம் 11,83,000 லட்சம் கோடியில் ஈர்த்த தொழில் முதலீட்டில் ஒரு லட்சம் கோடிக்கு குறைவாக தான் செயல்பாட்டுக்கு வந்துள்ளது? அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தது போல வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் கூறலாமா? வெளிநாட்டுக்கு சென்று 34,000 கோடி முதலீட்டை ஈர்த்ததில் 10 சதவீதம் கூட தொழில் தொடங்க வரவில்லை? தமிழகத்தில் ஒப்பந்தம் போட்ட தொழில் நிறுவனங்கள் எல்லாம் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடும் குற்றச்சாட்டியிருகிறார்.

இது தொடர்பாக மதுரை மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கூறும்போது, ‘‘மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதில் கடந்த நான்கரை ஆண்டு காலம் 11 லட்சத்து 83 ஆயிரம் கோடி அளவில் தொழில் முதலீட்டை ஈர்த்து இதன் மூலம் 34 லட்சம் இளைஞருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளோம் என்று கூறுகிறார்.
ஆனால் உண்மையான புள்ளிவிவரம் என்னவென்றால் இதுவரை தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடிக்கு குறைவாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பாக தொழில் முதலீட்டை ஈர்க்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் முதன்மை உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திற்கும், ஆந்திர மாநிலத்திற்கு மாறிவிட்டது. தென் கொரிய நாட்டைச் சேர்ந்த நிறுவனம் காலனி உற்பத்திக்காக 1,720 கோடியை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் போட்டு தற்போது ஆந்திராவுக்கு சென்று விட்டது. அதேபோல கூகுள் நிறுவனம் ஒரு லட்சம் கோடி அளவில் ஆந்திராவில் தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளது இதன் மூலம் அங்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் .இதற்காக ஆந்திரா அரசு சுமார் 22,000 கோடி அளவில் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது.
பாக்ஸ்கான் நிறுவன இந்திய தூதர் சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் .உடனடியாக 15 ஆயிரம் கோடியில் முதலீட்டை தமிழகத்தில் தொடங்கப் போவதாக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது உடனடியாக அந்த நிறுவனம் மறுத்தது .
இது மட்டுமல்லாதது முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் ,ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா,ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று அதன் மூலம் 34,014 கோடி அளவில் தொழில் முதலீட்டை ஈர்த்து இதன் மூலம் 47,650 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறினார் ஆனால் இதில் 5 சதவீதம் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை.
ஏற்கனவே மத்திய அரசு தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் வெளியிட்டது அதில் தமிழகம் இடம்பெறவில்லை மத்திய அரசு 30 சீர்திருத்தங்களை செய்தது அதில் தமிழகமெங்கும் எதையும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் ஆந்திரா மாநிலம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்கும் பொழுது இடைத்தார்கள் கிடையாது ஆனால் இங்கே பல்வேறு இடையூறுகள் இருப்பதால் தொழில் முதலீட்டார்கள் வர மறுக்கிறார்கள்.
தற்போது கூட மதுரையில் 36,000 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார் .பொதுவாக தென் மாவட்டத்தில் மதுரை ,தூத்துக்குடி தொழில் வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது அதை ஸ்டாலின் அறிவிக்கவில்லை .
- 83,000 லட்சம் கோடி அளவில் தொழில் முதலீட்டு ஈர்த்து உள்ளோம் என்று ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் மத்திய அரசு வெளியிடும் தரவுகளில் 9 சதவீதம் தான் உள்ளது. ஆகையால் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டம் தோறும் தொழிற்சாலைகளும் குறித்து முழுமையாக வெள்ளை அறிக்கை விட வேண்டும். மதுரையைப் பற்றி பல்வேறு பெருமையை முதலமைச்சர் ஸ்டாலின் விழாவில் கூறினார் ஆனால் இன்றைக்கு குப்பை மாநகராகவும், ஊழல் மாநகரகவும் உள்ளது இதற்கு எந்த பதிலும் கூறாமல் மௌனமாக இருந்தது ஏன்? என மதுரை மக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்’’ என கூறினார்
