அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது மகன் ஜவஹர் ஆகியோர் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்த நிலையில் அடுத்தடுத்து கோபி தொகுதியில் பலர் அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தொடர்ந்து மக்களை சந்தித்து வரும் செங்கோட்டையன் முன்னதாக தன்னுடைய கோபி எம்எல்ஏ பதிவையை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில் அவரைத் தொடர்ந்து பல அதிமுக தலைவர்களும் அடுத்தடுத்து இணைவார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தற்போது செங்கோட்டையனை சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவரது ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து பேசிய நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி வரை செங்கோட்டையன் அவர்களிடம் பொறுத்து இருக்குமாறு கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ஓ பன்னீர்செல்வம் டிசம்பர் 15ஆம் தேதி தன்னுடைய முடிவை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார். அவர் புதிய கட்சி தொடங்க இருக்கிறாரா அல்லது வேறு கட்சியில் இணைய இருக்கிறாரா என்பது அன்றைய தினம் தெரியவரும். மேலும் இதன் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வரை அவர்களிடம் செங்கோட்டையன் பொறுத்து இருக்குமாறு கூறியுள்ளார்.
