தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகமாகி வரும் நிலையில், ‘சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என ஆதங்கத்துடன் தனது வேதனையான பதிவுகளை வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!

இது தொடர்பாக வலை தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா“ROAD SAFETY IS LIFE SAFETY “கண்ணிமைக்கும் நேரத்தில் கலைந்த கனவுகள்!’’ என்ற தலைப்பில்,

‘‘நேற்று சுரண்டை நகராட்சி 4வது வார்டு கவுன்சிலர் சகோதிரி உஷா, அவர் கணவர், தங்கை இருசக்கர வண்டியில் பயணித்த போது சாலை விபத்தில் மூவரும் ஓரு சேர மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சுரண்டை நகரமே சோகத்தில் மூழ்கியள்ளது. சகோதிரி உஷா அவர்கள் செவிலியர். அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவும் பண்பை சிலாகித்து கூறினார். மருத்துவ உதவி நாடி வருபவர்கள் நேரம் காலம் பார்க்காமல் இல்லங்களுகே சென்று உரிய உதவிகளை செய்வார். கவுன்சிலராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்று தொடர் மக்கள் சேவை திறம்பட பணியாற்றியவர்.

முக்கியமாக மூன்று இள வயது பிள்ளைகளுக்கு அன்பான தன்னித்பிக்கையை ஊட்டிய தாய். மூத்த மகள் கீரிஸ்கித்தான் நாட்டில் 3 ஆம் ஆண்டு MBBS பயின்று வருகிறார். 12 ஆம் வகுப்பு படிக்கும் சுமித் , ஸ்டீபன் இரட்டையர். அந்த இரு இளைஞர்கள் பெற்றோரை இழந்து கண்ணீர் மல்க நின்ற காட்சி மனதை வாட்டியது.

சாலை விதிமுறைகள் அனைவரும் பின்பற்றனால் இத்தகைய மரணங்களை தவிர்த்திருக்கிலாமே என்ற ஆதங்கமும், வேதனையும் அடைந்தேன். தென்காசி வர்த்தக அணி அமைப்பாளர். முத்துகுமார், தென்காசி தொகுதி பொறுப்பாளர் கலை கதிரவன், சுரண்டை நகரச்செயலாளர் கணேசன், கழகத்திருடன் ஆறுதல் வழங்கினோம்!’’

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எளிமையுடன் மக்களிடம் பழகுவதும், துயரம் என்றால் ஓடோடி உதவுவதும், ஆறுதல் கூறுவதும்தான் தென்காசி மக்களை சோகத்திலும் நெகிழச் செய்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal