டிட்வா புயல் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி, தமிழகத்தில் கனமழை பொழிவைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலானது, இலங்கையில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது.. தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்த டிட்வா புயலால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று மாலை வலுவிழந்தது. இது மேலும் பலவீனமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது..

ஆனால் தற்போது சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைபெற்றிருக்கும் டிட்வா புயல், தொடர்ந்து மழைப்பொழிவை ஏற்படுத்திவருகிறது.. இது அடுத்த 24 மணிநேரத்திற்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பில்லை என்பதால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்டும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளன..

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழக்காமல் அடுத்த 24 மணிநேரத்திற்கு சென்னைக்கு அருகிலேயே நிலைகொண்டிருக்கும் என்பதால், இன்று இரவு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 20 செமீக்கும் மேலான மழை பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..

இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மீண்டும் புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது..

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal