தி.மு.க.வை மட்டும் கடுமையாக எதிர்ப்பது என்ற ‘கொள்கை’யுடன் 2026ல் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என உளறிக் கொண்டிருக்கும் விஜய்க்கு ‘சவுக்கடி’ கொடுத்திருக்கிறார் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்!
‘கூத்தாடும் நிழல்’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்,
‘‘தான் மட்டும் தான் ஹீரோ
மத்த எல்லோரும் வில்லன் என்னும் சினிமாத் தனத்தோடு…
யாரோ ஒரு வசனகர்த்தா எழுதிக் கொடுக்கும் அரசியலுக்கு பொருத்தமற்ற
வசனங்களை
மூச்சுமுட்ட பேசுறவர்
ஒன்னை தெரிஞ்சிக்கனும்…
ஆளும் கட்சியை எதிர்த்தால்
நாமும் ஆளுங்கட்சி ஆகிவிடலாம் என
கனாகண்ட பலபேரு அரசியலில் அடையாளமற்று பாழுங்
கட்சியானார்கள் என்பது தான் வரலாறு..
அந்த வரிசையில் இடம் பிடிப்பதாகவே உங்களது முதிர்ச்சியற்ற பேச்சும் செயலும் இருக்கிறது..
இது தான் உண்மை…
மருது…’’ என பதிவிட்டிருக்கிறார்.
