‘இன்றைக்குக் கூட பஞ்சாங்கம் பார்த்தேன்… எதிர்க்கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது’ எனக் கூறி ஆளும் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘பெண்களுக்கு எதிரான வன்முறை தமிழகத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு மட்டும் 4 கொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த ஆட்சியை விட, தற்போதைய திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

வன்கொடுமை சம்பவங்கள் கடந்த ஆட்சியை விட 17 சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி மீதி மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடந்து வருகிறது. “இன்றைக்கு கூட பஞ்சாங்கம் பார்த்தேன். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று ஒரு பஞ்சாங்கத்தில் போடப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருப்பது பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal