அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்ச்சியின் தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து குறைகளைகேட்டு வருகிறார் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்!
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தென்மாவட்ட நிர்வாகி ஒருவர் முதல்வர் முன் கண்ணீர் மல்க பேசினார். இந்த வீடியோதான் வலைதளங்களில் அன்றைய தினம் ‘ஹேஸ்டேக்’ ஆனது. அடுத்தநாளே அவரது கோரிக்கையையும் நிறைவேற்றினார் முதல்வர்.
‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நடந்த இந்த உருக்கமான சந்திப்பின் பின்னணி குறித்து தென்மாவட்டத்தில் உள்ள சீனியர் உடன்பிறப்புகளிடம் பேசியபேது, அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அவர்கள் நம்மிடம், ‘‘சார், தென்மாவட்ட தி.மு.க.வில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தில் இருப்பதை அனைவரும் அறிவார்கள். சமீபத்தில் மாவட்டச் செயலாளர் மாற்றம் நிகழ்ந்தது. இதில் புதிதாக வந்த மா.செ., ‘தம்பி உன்னிடம் மூன்று பதவிகள் இருக்கிறது. ஒருவருக்கு ஒரு பதவிதான். அதில் எது என்று நீயே முடிவு செய்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்.
புதிதாக வந்த மா.செ.வால் நமது பதவிக்கு ஆபத்தாகிவிடுமோ என்ற எண்ணத்தில்தான் அறிவாலயத்தில் ‘கண்ணீர் நாடகம்’ அரங்கேறியிருக்கிறது. தவிர, இவர் மீது நில அபகரிப்பு விவகாரம் ஒன்றும் நிலைவையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் மேற்கு மாவட்ட நிர்வாகி ஒருவர் சர்ச்சையில் சிக்கி பெண்ணிடம் பேரம் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது அந்தப் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த ‘கண்ணீர் நாடகம்’ அரங்கேறியிருக்கிறது’’ என்றனர்.
நடிகர்களை விட நல்லா நடிக்குறீங்கப்பா…? உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு உண்மை நிலவரம் தெரியாமலா போய்விடும்..?
