சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும், அக்கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சுற்றி சுழல்கின்றனர். இதனால், அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் அப்செட் ஆகியிருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆரை தி.மு.க. தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுமோ என்ற சந்தேகம் அ.தி.மு.க.விற்கு எழுந்திருக்கிறது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான களப்பணிகளை விரைவுபடுத்துமாறு திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் வாக்குசாவடிக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தப் பணிக்கான காலக்கெடு நெருங்கி வருவதால் இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பணிகளில் அதிமுக, தவெக பின்தங்கி உள்ள நிலையில் திமுகவின் கை ஓங்கி உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜய்க்கு செல்லும் இளம் வாக்காளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. விஜயின் வாக்காளர்கள் பலரும் 2000க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருந்திருக்காது.
இதனால் இப்போது SIR நடக்கும் நிலையில்.. புதிய வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். இதனால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கடுமையான பாதிப்புகளை சந்திக்கலாம் . தமிழக வெற்றிக் கழக வாக்காளர்கள் பலர் 2000ல் பிறந்தவர்கள் . இதனால் இவர்களின் வாக்குரிமை கடுமையாக பாதிக்கப்படும். பல இளம் தலைமுறையினர் வாக்குகளை இழக்க நேரிடும். முக்கியமாக பலர் இதில் சென்னையில் பணியாற்றுகிறார்கள். பலர் சொந்த ஊர்களில் இல்லை. இவர்கள் அதிகாரிகள் சோதனை செய்ய வரும் நேரத்தில் வீட்டில் இல்லையென்றாலும் வாக்குரிமையை இழக்க நேரிடும். 3 முறை அதிகாரிகள் வீட்டிற்கு வருவார்கள். அதை தவறவிடும் பட்சத்தில் இளம் தலைமுறையினர் பலரின் வாக்குகள் பறிபோகும் அபாயங்கள் உள்ளன.
அதே சமயம் திமுக கடுமையான கிரவுண்டு வேலைகளை செய்து வருகிறது. திமுகவினர் பூத் வாரியாக வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் செல்கின்றனர். . திமுக பூத் ஏஜெண்டுகள், நிர்வாகிகள் BLO அதிகாரிகளுடன் பயணம் செய்து வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர். ஒருவர் விடாமல் மக்களை சந்தித்து.. எப்படி பார்ம் நிரப்ப வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் என்பதை தீவிரமாக விளக்கி வருகின்றனர் 1 கோடி வாக்குகள் கூட நீக்கப்படலாம்.. என்ற அச்சம் ஆளும் தரப்பிடம் நிலவுகிறது. இதனால் திமுக நிர்வாகிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளனர். பல மாவட்டங்களிலிருந்தும் வரும் தகவல்கள், திமுக பிரதிநிதிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. திமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று பணிகளை செய்கின்றனர். அதோடு மக்களுக்கு விண்ணப்பத்தை நிரப்புவதில் உதவி செய்கின்றனர்.
இது அதிமுக, பாஜக தரப்பை ஒரு கட்டத்தில் அப்செட்டில் ஆழ்த்தி உள்ளதாம். பீகாரில் இப்படி நடக்கவில்லை. இப்போது SIR நடக்கும் மேற்கு வங்கத்தில்கூட இப்படி நடக்கவில்லை. ஆனால் திமுக மொத்தமாக களமிறங்கிவிட்டது. ஒரு பக்கம் வழக்கும் போட்டுவிட்டு இந்த பணிகளை தீவிரமாகவும் இன்னொரு பக்கம் செய்கிறார்கள்.
றப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தொடர்பான களப்பணிகளை விரைவுபடுத்துமாறு திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுகவின் வாக்குசாவடிக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், வாக்குச்சாவடிக்குழு உறுப்பினர்கள் எந்த விதமான சுணக்கமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். ஒவ்வொரு சாவடியையும் சென்றடைந்து, வாக்காளர் படிவங்களைப் பூர்த்தி செய்ய மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் (BLO) வாக்காளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
