சொந்த வீடுகளை இழந்து தவிக்கும் 8 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் பகுதியில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி இடிக்கப்பட்டுள்ள 8 வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினரை இன்று (12.11.2025) கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், டாக்டர் சரவணன் கூறும்போது, ‘‘1987ல் இவ்விடத்தில் வீடுகளை கட்டிக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்து, தோராய பட்டா, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றையும் வழங்கியுள்ளது. தற்போது, சாலை அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டதாக கூறும் மாநகராட்சி நிர்வாகம், 40 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது. இதில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் தலையீடு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இதுபோன்ற மக்கள் விரோத செயல்கள் இனி நடைபெறாமல் தடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
