வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என சாணக்யா டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சாணக்யா டிவி கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. 2989 வாக்காளர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதற்காக 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.
இதில், மத்திய பாஜக ஆட்சி எப்படி இருக்கிறது, மாநில திமுக ஆட்சி எப்படி இருக்கிறது, முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது, விஜய் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் , விஜய் கூட்டணி வைக்க வேண்டுமா, அதிமுக – பாஜக செயல்பாடு எப்படி இருக்கிறது, இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றிபெறுவார் என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக சாணக்யா சேனல் சர்வே வெளியிட்டு உள்ளது.
சாணக்யா சேனல் சர்வேவில், மத்திய பாஜக ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 24%, சூப்பர் 32% மற்றும் பரவாயில்லை என்று 44% பேர் பதில் அளித்துள்ளனர் . மாநில திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 45%, சூப்பர் 20% மற்றும் பரவாயில்லை என்று 35% பேர் பதில் அளித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 41%, சூப்பர் 22% மற்றும் பரவாயில்லை என்று 37% பேர் பதில் அளித்துள்ளனர் . விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 24%, சூப்பர் 29% மற்றும் பரவாயில்லை என்று 47% பேர் பதில் அளித்துள்ளனர் . விஜய் கூட்டணி வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு கூடாது 26%, ஆம் 36% மற்றும் பிறகு பார்க்கலாம் என்று 38% பேர் பதில் அளித்துள்ளனர்.
விஜய் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு காங்கிரஸ் 18%, நாம் தமிழர் 21% மற்றும் அதிமுக – பாஜக உடன் என்று 61% பேர் பதில் அளித்துள்ளனர் . அதிமுக – பாஜக செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 27%, சூப்பர் 32% மற்றும் பரவாயில்லை என்று 41% பேர் பதில் அளித்துள்ளனர் . இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றிபெறுவார் என்ற கேள்விக்கு நாம் தமிழர் 5%, திமுக கூட்டணி 36%, தவெக 20%, அதிமுக – பாஜக கூட்டணி 39% மற்றும் பரவாயில்லை என்று 41% பேர் பதில் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தவெக 20% பெற்று வளரும் என்று இந்த கணிப்பு கூறி உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி 39% பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
