வருகிற சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதில் மகள் காந்திமதியை டாக்டர் ராமதாஸ் களமிறக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பா.ம.க.வில் தந்தை மகனுக்கு இடையேயான மோதல் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறுதான் என்கிறார்கள் பா.ம.க.வைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்
பாமக செயல் தலைவராக மகள் காந்திமதியை, நியமித்த பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காந்திமதி, தனக்கும் கட்சிக்கும் பாதுகாப்பாக இருப்பார் என ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் மகள் காந்திமதியை போட்டியிட வைக்க முடிவு செய்திருக்கிறாராம் டாக்டர் ராமதாஸ்!
பாமகவுக்கு தருமபுரி மாவட்டங்களிலும் வட தமிழக மாவட்டங்களிலும் அதிக செல்வாக்கு உள்ளது. அதிலும் தருமபுரியில் உள்ள கிராமங்களில் இன்று வரை ராமதாஸுக்கு நல்ல மரியாதையும் ஆதரவும் இருக்கிறதாம். இது கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த ராமதாஸ் பேத்திகளே வெளிப்படுத்தியிருந்தார்.
எனவே தனது மகள் காந்திமதியை தருமபுரி மாவட்டத்தில் வலுவாக உள்ள ஒரு தொகுதியில் களம் காண வைத்து வெற்றி பெற வைக்க ராமதாஸ் விரும்புகிறாராம். இதற்காக தான் செல்லவுள்ள கூட்டணியை மிகவும் கவனமாக தேர்வு செய்ய விரும்புகிறாராம்.
இந்த விவகாரம்தான் அன்புமணி தரப்பை மேலும் கோபமடைய வைத்திருக்கிறது என்கிறார்கள்.

