கரூர் த.வெ.க. பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிறது. இந்த விவகாரத்தில் த.வெ.க. மா.செ. நிர்வாகி உள்ளபட சிலர் கைதாகி சிறையில் உள்ளனர்.

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். புஸ்ஸி ஆனந்த் முக்கியப் புள்ளி ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

புஸ்ஸி ஆனந்த்தையும் நிர்மல்குமாரையும் தனிப்படை போலீஸார் தேடி வரும் நிலையில், தலைமறைவாகவே இருந்து கொண்டு முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த் ஏற்காட்டில் இருப்பதாக தகவல் கிடைத்து அவரை போலீஸார் தேடினர். ஆனால் அவர் அங்கு இல்லை என சொல்லப்படுகிறது.

சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் புஸ்ஸி ஆனந்தை தேடி வரும் நிலையில் அவர் புதுவையில் போலீஸ் பாதுகாப்பு மிகுந்த முக்கிய புள்ளியின் பங்களாவில் தஞ்சமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய முடியாமலும் அங்கு போய் அவர் இருக்கிறாரா என்றும் சோதனை நடத்த முடியாமல் தமிழக தனிப்படை போலீஸார் புதுவையில் முகாமிட்டு வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

ஆனந்த் புதுவையில் புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ என்பதும் அவர் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனந்தின் முயற்சியால்தான் விஜய்- & ரங்கசாமி சந்திப்புகள் கடந்த காலங்களில் நடந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனந்தின் வீடு புதுவை ஏனாம் பகுதியில் வெங்கடாச்சல பிள்ளை வீதியில் உள்ளது. இன்று புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படுவதால் அதன் தீர்ப்பை பொறுத்து புஸ்ஸி ஆனந்த் மீதான நடவடிக்கை தீவிரமடையுமா, இல்லை காவல் துறை மேல் முறையீடு செய்யும் அளவுக்கு போகுமா என்பது தெரியவரும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal