‘திருச்சியில் உள்ள வளர்ச்சிப் பணிகளையும், திமுக அரசின் சாதனைகளையும் விஜய் தெரிந்துகொள்ளவேண்டும்’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் முதல் அரசியல் பிரச்சாரக்கூட்டத்தை திருச்சியில் ஆரம்பித்தார். அப்போது பேசிய விஜய் , “இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி முன்னேற்றம் அடையவில்லை. காவிரி நீர் பாயும் பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நீடிக்கிறது. மணல் கொள்ளையில் ஈடுபடுவதைத் தவிர, வளர்ச்சி பணிகள் செய்யவில்லை,” என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், திமுக அமைச்சர் அன்பில் மகேஷ், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். “விஜய் பேசியது சரியாக கேட்கவில்லை. திருச்சி வளர்ச்சியை அவர் சரியாக பார்க்கவில்லை. திருச்சி மாவட்டத்தில் நான் மற்றும் அமைச்சர் நேரு தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். திருவெறும்பூர் அருகே மாதிரி பள்ளி, ஒலிம்பிக் அகாடமி, பஞ்சபூர் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்திற்கு எதுவும் செய்யப்படவில்லை என்ற விஜய்யின் பொதுவான குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், விஜய் திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை என்றும் அன்பில் மகேஸ் வலியுறுத்தினார்.அமைச்சர் அன்பில் மகேஸ், “கல்வி நிதி, ஷிமிஸி போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து விஜய் ஏன் பேசவில்லை? திமுக ஆட்சியின் சாதனைகளை அவர் மறைப்பதே இதன் பொருள்,” என்று கேள்வி எழுப்பினார்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை எடுத்துரைத்து, “திருச்சி மாவட்டத்தில் நான் மற்றும் அமைச்சர் நேரு தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். திருவெறும்பூர் அருகே மாதிரி பள்ளி, ஒலிம்பிக் அகாடமி, பஞ்சபூர் பேருந்து நிலையம் போன்றவை நடைபெறுகின்றன. விஜய்யின் விமர்சனம், திருச்சியின் உண்மையான வளர்ச்சியை அறியாததால் வந்தது,” என்று தெரிவித்தார். திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை மக்கள் அறிந்து கொள்வதாகவும், விஜய்யின் பொதுவான குற்றச்சாட்டுகள் மக்களிடம் ஏற்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.இந்த விமர்சனங்கள், தவெகவின் பிரச்சாரத்தை தொடர்ந்து, திமுகவின் வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி பதிலளிப்பதாக அமைந்தது.
அது மட்டுமின்றி, விஜய் பிரசாரத்தில் ஈடுபட்ட பகுதிக்கு அருகில் இருந்த அரசு பள்ளி மேற்கூரைகள் இடிந்துள்ளது எனவும், என்ஜாய் பண்ணுங்க என்டர்டைன்மென்ட் பண்ணுங்க, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டவற்றை சேதப்படுத்தாதீர்கள் எனவும் விஜய்க்கு சரியான திட்டமிடல் இல்லை, பேசும்போதே மைக் ஆப் ஆகிவிட்டது”என்றும் அன்பில் மகேஷ் விமர்சித்து பேசினார்.