த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப் பயணத்திற்கு தி.மு.க. தலைமை தடைபோடுவதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்து த.வெ.க. தரப்பில் பேசியபோது, ‘‘தவெக மாநில தலைவர் விஜய் வரும் வாரம் முதல் தமிழம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
திருச்சியிலிருந்து சுற்றுப்பயணத்தை துவக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் திருச்சியில் பேசுவதற்கான இடத்தை தேர்வு செய்து காவல்துறையிடம் தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் திருச்சியில் எந்த இடத்திலும் விஜய் பேசுவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
முதல்வரின் உத்தரவு படியே விஜய் சுற்றுப்பயணத்திற்கான அனுமதியை காவல்துறை மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்கட்சி தலைவர் எடப்பாடியின் பிரச்சாரங்களுக்கு அனுமதி அளித்த காவல்துறை விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதிக்க மறுப்பது ஏன்?’’ என கேள்வி எழுப்புகிறார்கள் தவெகவினர்.