எடப்பாடி பழனிசாமியுடனும், அ.தி.மு.க. தொண்டர்களிமும் இணக்கமாக ‘ கைகோர்த்து’ பணியாற்றவேண்டும் என பா.ஜ.க. வினருக்கு அமித் ஷா கட்டளையிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் நெல்லையில் நடந்த பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில், ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வினரின் கடமை’ என அண்ணாமலை பேசினார்.
இந்த நிலையில்தான் இன்று ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அரங்கின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்துள்ளனர். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அருகருகே அமர்ந்திருப்பது இரு கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.