‘நாங்கள் நாற்பது சீட்டுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை… நாட்டை ஆள்வதற்காக கட்சி ஆரம்பித்திருக்கிறோம்’ என விஜய்யை உசுப்பி விட்டு… உசுப்பி விட்டு… மீண்டும் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடுவார் ஆதவ் அர்ஜுனா என்று ‘தமிழக அரசியல்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்தோம். இன்றைக்கு வெளியான கருத்துக் கணிப்பும் அதையேதான் உணர்த்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும் என்றும், அதிமுக – & பாஜக கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்றும் இந்தியா டுடே – சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணிகளில் பல்வேறு உத்திகளை வகுத்து செயல்படத் தொடங்கியுள்ளன. நடிகர் விஜய்யின் தவெக கட்சியும் முதல் முறையாக தேர்தல் களம் காணத் தயாராகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும் என இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்துMood of the Nation என்ற தலைப்பில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் 47 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு, கடந்த பிப்ரவரி மாதத்தில் 52 சதவீதமாக உயர்ந்திருந்த வாக்கு சதவீதம், தற்போது 48 சதவீதமாக குறைந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே களம் கண்டு, மொத்தமாக 41 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், பிப்ரவரியில், இக்கட்சிகளின் வாக்கு சதவீதம் 21 சதவீதமாக குறைந்ததாகவும், மீண்டும் கூட்டணி உருவான நிலையில் தற்போது 37 சதவீதமாக தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக – அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 3 தொகுதிகளில் வெற்றி கிட்டும் என்றும் மக்களை முழுமையாக சென்றடைய கடும் முயற்சிகளை அந்தக் கூட்டணி மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் விஷீஷீபீ ஷீயீ tலீமீ ழிணீtவீஷீஸீ கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் 12 சதவீதமாக இருந்த பிற கட்சிகளின் வாக்கு வங்கி, பிப்ரவரி மாதத்தில் 7 ஆக சரிந்ததாகவும், தற்போது தவெக களமிறங்கிய நிலையில், நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 15 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணிக்கு வாக்குகள் சற்று சரிந்திருந்தாலும் விஜய்யின் வருகை திமுக உதவிகரமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சி மீது அதிருப்தியில் இருப்பவர்கள், விஜய்க்கு வாக்களிக்கக் கூடும் என்றும் அது அதிமுக – பாஜக வாக்குகளைப் பிரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, விஜய்யின் வருகை திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை இன்னும் பிரகாசிக்கச் செய்வதாக கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், இன்றைக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்றால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகளிலும், அதிமுக-பாஜக கூட்டணிக்கு 3 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கக்கூடும் என்ற கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவைப் பொறுத்தவரை இன்று தேர்தல் நடைபெற்றால் 324 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 208 தொகுதிகளில் மட்டுமே இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் உண்மையான ‘பி டீம்’ யார் என்பதை மக்களே உணர்ந்துகொள்ளட்டும்…?