பிரதமர் நரேந்திர மோடி, வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார்.
கடந்த மாதம், 26ம் தேதி இரவு தூத்துக்குடி வந்து, அம்மாவட்ட விமான நிலை யத்தின் புதிய முனையத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மேலும், நெடுஞ்சாலை, ரயில்வே உட்பட பல்வேறு துறைகளின் திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அன்றிரவு, திருச்சி சென்ற மோடி, அடுத்த நாள் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார்.
மீண்டும் வரும், 26ம் தேதி, பிரதமர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று, அவர் கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், அடுத்த நாள் திருவண்ணாமலைக்கும் செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ.க, வட்டாரங்களில் பேசும்போது, ‘‘இம்மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக, டில்லி மேலிடம் தெரிவித்துள்ளது. எந்த தேதி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை; மோடி வருகை தொடர்பான உறுதியான தகவல், இந்த வார இறுதியில் தெரியவரும்” என்றனர்.