தமிழகத்தில் ஆங்காங்கே இன்னும் நடக்கும் ஆணவக் கொலைகள்தான் அதிர்ச்சியடைய வைக்கிறது.
இந்த நிலையில்தான் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட செய்தி, அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘பல வண்ணம் கொண்ட தோள்களின் ஸ்பரிசம் அங்கே…
வேற்று மொழி, இசையை கேட்டிடும் காதுகள் அங்கே…
பல இனத்தவரின் உணவை சுவைத்திடும் நாவு அங்கே…
இத்தனை வேறுபாடுகள் நிறைந்த மணக்கோலங்கள் அங்கே…

நிறம் , இனம் , உணவு முறை அனைத்தும் பொதுவே இங்கே…
கண்களுக்கு புலப்படாத சாதியே,
காதுகளால் கேட்க முடியாத சாதியே
புளிப்பு, இனிப்பு, காரம் உணராத சாதியே!
உணர்ச்சியற்ற, வடிவமற்ற உனக்கு
எங்கிருந்து வருகிறாய் இவ்வளவு ஆக்ரோஷத்துடன்
வாழ்க்கையில் ஒன்றிணைய விரும்பும் உள்ளங்களை
வெட்டி புதைப்பதற்கு…
பணிவான வேண்டுகோள்
ஐம்புலன்களை இல்லாத சாதி
ஏற்போர் அமைதியாக பயணம் செய்யுங்கள்
புரியவில்லை எனக்கு உங்கள் நம்பிக்கை
ஆனால் அறிந்தது திரும்ப பெற முடியாத து உயிர் மட்டுமே..!
உலகமாதாக்களின் கருவறை
இருளை கிழித்து குழந்தையை வெளிச்சத்தில் வந்த பலருக்கு தெரியுமா?
மனிதன் உருவாக்கிய கருவறையில் உனக கும்
செல்ல அனுமதியில்லை இம்மண்ணில்?
இனியாவது விழித்தெழு! ஒருங்கிணைந்து கோவில் கருவறையில் கூடுவோம்…
இரட்டை குவளைகள இருட்டடிப்போம்…
ஒன்று சேர்ந்து நீர் பருகுவோம்
வாழு! வாழ விடு!
(கனத்த இதயத்துடன்,
பூங்கோதை ஆலடி அருணா )
பணிவான வேண்டுகோள்… –
‘‘கடுமையான ஆபாசமான பதிவுகளை முடிந்தவரை தவிர்க்கவும்..!’’ என பதிவிட்டுள்ளார்.
