
‘‘ ‘உங்களுடன் ஸ்டாலின்’ ’’ திட்டம் மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பாதையில் நமது தமிழ்நாடு அரசு மக்களின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுக்காக ‘‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்’’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியிருப்பதுதான் உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தை அமைச்சர் பெருமக்கள் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்திரு செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தொடங்கி வைத்து, சிறப்புறை ஆற்றி வருகிறார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடையம் ஒன்றியத்தில் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ‘‘ ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வர் மிகவும் சிறப்பாக எடுத்து நடத்தி வருகிறார். இந்த திட்டத்தை அவ்வளவு எளிதில் எடுத்து நடத்திவிட முடியாது. நம் முதல்வர் மீது தமிழக மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
மின் அட்டை பெயர் மாற்றம், பட்டா மாற்றம் போன்றவற்றை வெறும் பதினைந்து நிமிடத்தில் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. அதே போல் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு வாரத்தில் கிடைக்கிறது. இது போன்ற திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. தமிழகத்தில்தான் வளர்ந்த நாட்டுக்கு இணையாக இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.
தவிர, குடும்பப் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயும், தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில்’ நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை வாரி வழங்கும் முதல்வரைத்தான் மக்கள் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்’’ என்றார்.
தவிர, அவரது வலைதளப் பக்கத்தில், அறிஞர் அண்ணாவின், ‘உங்களுடன் ஸ்டாலின்’
என் அன்பு தம்பி,
மக்களிடம் செல்,
அவர்களுடன் வாழுங்கள்,
அவர்களுடன் கற்றுக்கொள்ளுங்கள்,
மக்களை நேசியுங்கள்,
அவர்களுக்கு சேவை செய்யுங்கள்,
அவர்களோடு திட்டமிடுங்கள்,
அதனை அடித்தளமாக வைத்து அவர்கள்
வாழ்கையை கட்டமைக்க செயல்படுங்கள்’’ என்ற வாசகத்தையும் பதிவிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை.
தவிர, ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையிலும் அதி தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை!
