தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாது அரசியல் மாநாடு மதுரையில் அடுத்த மாதம் நடக்கிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவல் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காமராஜர் குறித்து சர்ச்சைக் கருத்துக்களை தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா பேசியது காங்கிரஸ் நிர்வாகிகளை கொதிப்படைய வைத்திருக்கிறது.
ஏற்கனவே ‘ஆட்சியில் பங்குவேண்டும்’ என காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷம் போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணிக் கூட்டில் கல்லெறிந்துவிட்டார் திருச்சி சிவா என்றனர். இந்த நிலையில்தான் திருச்சி சிவாவை முதல்வர் கண்டித்ததோடு, மறைந்த தலைவர்கள் பற்றியும், கூட்டணிக் கட்சிகள் பற்றியும் யாரும் விமர்சிக்கக்கூடாது என தி.மு.க. தலைமை கண்டிப்புடன் உத்தரவு போட்டியிருக்கிறது.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய இருவரையும் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு திராவிடக் கூட்டணிகளையும் வீழ்த்த ஒரு மிகப்பெரிய ராஜதந்திரத் திட்டம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஒரு பக்கம் திமுக கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்த்து வருகிறது. இந்த நிலையில், விஜய் தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், விரைவில் அவர் ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைந்தால், இந்த கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தக் கூட்டணி எதிர்பார்த்தபடி அமைந்தால் கண்டிப்பாக அதிமுக, திமுக என இரண்டு திராவிடக் கூட்டணிகளையும் வீழ்த்தும் என்று தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, த.வெ.க.வின் இரண்டாவது அரசியல் மாநாடு மதுரையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் ராகுல்காந்தியை கலந்துகொள்ள வைக்கும் முயற்சியில்¢ நடிகர் விஜய் இறங்கியிருக்கிறாராம். இது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் வளர்ந்து வருவதாக சொல்லப்படும் பா.ஜ.க.வுக்கு ‘செக்’ வைத்ததாகவும் இருக்கும் என்கிறார்கள் காங்கிரசின் மூத்த நிர்வாகிகள்!
