திருச்சி மாவட்டம் கூத்தையப்பார் பேரூராட்சி 11 ஆவது வார்டு கவுன்சிலர் ரஞ்சித்குமார் (38) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட கூத்தையப்பார் பேரூராட்சியின் 11 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்தவர் ரஞ்சித் குமார் (38). இவர் திமுக இளைஞரணி செயலாளரும் ஆவார்.
ரஞ்சித்குமார் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை சிலர் வழிமறித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் திருவெறும்பூர்- நாவல்பட்டு சாலையில் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரஞ்சித்குமாருக்கும் அந்த மர்ம கும்பலுக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் இருந்ததா, தொழில் போட்டி இருந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
