தாம்​பரம் தொகுதி திமுக வேட்​பாள​ராக மருத்​து​வர் கிருத்​திகா தேவி அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தற்​போதைய எம்​எல்ஏ எஸ்​.ஆர்​.​ராஜா​வின் ஆதர​வாளர்​கள் மீண்​டும் வாய்ப்பு கோரி டி.ஆர்​.​பாலு, ஆர்​.எஸ்​.​பாரதி மற்​றும் அமைச்​சர் அன்​பரசனின் வீடு​களை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் சூடு​பிடிக்​கத் தொடங்​கி​யுள்ள நிலை​யில், அதி​முக கூட்​ட​ணி, திமுக கூட்​ட​ணி, தவெக, நாம் தமிழர் கட்​சி​யினர் வேட்​பாளர்​களை அறி​வித்​துள்​ளனர். இதனிடையே திமுக​வில் வேட்​பாளர் பட்​டியல் குறித்த சலசலப்​பு​கள் எழத் தொடங்​கி​யுள்​ளன. மேலும், வெற்றி வாய்ப்​புள்ள தொகுதி கூட்​ட​ணிக்கு அளித்​ததும் கடும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​நிலை​யில், தாம்​பரத்​தில் திமுக சார்​பில் மருத்​து​வர் கிருத்​திகா தேவி வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். அந்த அறி​விப்பு சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தாம்​பரம் தொகு​தி​யில் தற்​போது எம்​எல்​ஏ-​வாக இருக்​கும் எஸ்​.ஆர்​.​ராஜாவுக்கு மீண்​டும் வாய்ப்​பளிக்​கக் கோரி அவருடைய ஆதர​வாளர்​கள் கடந்த 2 நாட்​களாக தீவிரப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

ஏற்​கெனவே 3 முறை எம்​எல்​ஏ​வாகப் பதவி வகித்த அனுபவம் கொண்ட எஸ்​.ஆர்​.​ராஜாவுக்கே மீண்​டும் வாய்ப்பு வழங்க வேண்​டும் என்​பது அவரது ஆதர​வாளர்​களின் கோரிக்​கை​யாக உள்​ளது.

இதனை வலி​யுறுத்​தி, அக்​கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​யான டி.ஆர்​.​பாலு மற்​றும் ஆர்​.எஸ்​.​பாரதி அமைச்​சர் அன்​பரசன் ஆகியோரின் இல்​லத்தை எஸ்​.ஆர்​.​ராஜா​வின் ஆதர​வாளர்​கள் முற்​றுகை​யிட்​டனர். போராட்​டத்​தின் போது, அமைச்​சர் தா.மோ.அன்​பரசனுக்கு எதி​ராக​வும் போராட்​டக்​காரர்​கள் கோஷங்​களை எழுப்​பிய​தால் அங்கு பரபரப்பு நில​வியது. வேட்​பாளரை மாற்​றி​விட்​டு, மீண்​டும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்​டும் என்று அவர்​கள் முழக்​கமிட்​டனர்.

டாக்டர் கனிமொழி எம்.பி

இதே​போல், தலைமை நிலைய செயலர் ஆர்​.எஸ்​.​பாரதி மற்​றும் அமைச்​சர் அன்​பரசன் ஆகியோர் வீடு​களை​யும் எஸ்​.ஆர்​.​ராஜா ஆதர​வாளர்​கள் முற்​றுகை​யிட்​டனர். இதனைத் தொடர்ந்து அண்ணா அறி​வால​யம் சென்ற அவர்​கள் அங்​கும் ராஜாவுக்கே வாய்ப்பு தர வேண்​டும் எனக் கூறி முழக்​கமிட்​டனர். பின்​னர் அ.ராசா அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

தாம்பரம் தொகுதியில் மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு சீட் வழங்கப்படாதது குறித்து அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் மருத்தவர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி. இவர் தி.மு.க.வின் சீனியரான சோமுவின் மகள் கனிமொழியின் நெருங்கிய தோழியும் கூட! இந்த நிலையில்தான் ‘சமுதாய’ பற்றில் இவரை வேட்பாளராக அறிவித்ததற்குப் பின்னணியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சோமு மகள் கனிமொழி ஆகியோரும், எம்.பி.க்கள், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் டி.ஆர்.பாலுவின் வீட்டை முற்றுகையிட்டிருக்கிறார்கள் எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள். தாம்பரம் தொகுதியைப் பொறுத்தளவில் மீண்டும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு சீட் கொடுப்பார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், வாய்ப்பு கொடுக்காத அதிருப்தியில் டி.ஆர்.பாலு வீடு தொடங்கி அறிவாலயம் வரை தங்களது அதிருப்தி குரலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வேட்பாளரை மாற்றாவிட்டால் எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் தேர்தல் வேலை பார்க்கமாட்டார்கள். இதனால், அ.தி.மு.க. வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எளிதில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. தாம்பரம் தொகுதியைப் பொறுத்தளவில் இலை துளிர்த்து, சூரியன் மறையும் நிலைதான் இருக்கிறது’’ என்றனர்.

தா.மோ.அன்பரன் தரப்பினரோ, ‘‘சார், இரு சக்கர வாகனத்தில் துணி வியாபாரம் செய்தவர்தான் எஸ்.ஆர்.ராஜா. அதன் பிறகு செங்கல், சிமென்ட் வியாபாரம் என தொழிலை விரிவுபடுத்தியவர், வேளச்சேரியில் ஸ்டாலின் விடுகட்டியபோது தொழில் ரீதியாக ஏற்பட்ட நட்பின் வாயிலாக தாம்பரம் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார். இன்றைக்கு எஸ்.ஆர்.ராஜா இந்தளவிற்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உச்சத்தை அடைந்திருக்கிறார் என்றால், அதற்கு காரணம் தி.மு.க. என்ற இயக்கம்தான். அந்த இயக்கத்திற்கு எதிராக வேலை பார்க்கமாட்டார் என நம்புகிறோம்.

தி.மு.க.வைப் பொறுத்தளவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று தலைவர் விரும்புகிறார். அந்த வகையில்தான் மருத்துவர் கிருத்திகா தேவியை வேட்பாளராக தேர்வு செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். எனவே, எஸ்.ஆர்.ராஜாவிற்கு வேறு வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் கொடுப்பார்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் தாம்பரம் தொகுதியில் நடக்கும் திரைமறைவு அரசியல் காரணமாக இலை துளிர்த்துக் கொண்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal