தமிழக சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக இயக்கி வரும் நிலையில், புதிய கட்சி தொடங்கிய வி.கே.சசிகலா ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார்.
நடைபெற உள்ள நிலையில், இதற்காக இன்று (மார்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. கடந்த தேர்தல்களில் தி.மு.க. & அ.தி.மு.க. என இரு திராவிட கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி இருந்தது. ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி, அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

மேலும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்த இவர், புதிய கட்சி தொடங்கி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடக் கூட்டணி அமைத்தார்.
இதனிடையே தமிழகத்தில் இன்று முதல் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், வி.கே.சசிகலா தனது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், சங்கரன் கோவிலை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேன் ஆகியோருடன் 2 கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இதில் அடங்கியுள்ளனர்.

மேலும் கூட்டணீயல் இணைந்துள்ள பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கு சாத்தூர் மற்றும் ஆலங்குளம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நன்னிலம் தொகுதியில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொளச்சல், திண்டுக்கல், மதுரை சென்ட்ரல், மானாமதுரை, மன்னார்குடி, மயிலாடுதுறை, மேலூர், முதுகுளத்தூர், நாங்குநேரி, பரமக்குடி, ராஜபாளையம், சிவகங்கை, சிவகாசி, ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், தென்காசி, திருமங்கலம், திட்டக்குடி, திருச்சி கழக்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
