அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அ.தி.மு.க.வில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிருப்தியில் இருக்கும் ‘மாஜி’ மணிகண்டன் த.வெ.க.வில் இணைவதற்கான பேச்சுவார்தையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது. ‘‘த.வெ.க.வில் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்’’ என்கிறார்கள் ‘மாஜி’ மணிகண்டனின் ஆதரவாளர்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் மணிகண்டன் பெயர் இடம்பெறாதது குறித்து ராமநாதபுரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், மாவட்டத்தில் உள்ள முக்கியப் புள்ளியின் மனைவி போட்டியிடுகிறார். அமைச்சர் பதவி பெறுவதில் மனைவிக்கு போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முதுகுளத்தூர் முன்னால் எம்.எல்.ஏ. முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோருக்கு சீட் கிடைக்காமல் செய்துவிட்டார்’’ என்றனர்.

இதுதானே அரசியல்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal