சென்னை அண்ணாநகர் தொகுதியில் உதயநிதியின் வலதுகரம் களம் இறங்கும் நிலையில், வில்லிவாக்கத்தில் சபரீசனின் வலகரம் களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது
அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் மோகனுக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை. இந்த தொகுதியில் உதயநிதிக்கு நெருக்கமாகவும், வலதுகரமாகவும் இருப்பவர் களமிறங்குகிறார். இதனால், வில்லிவாக்கம் தொகுதியில் மோகனின் மகன் அண்ணாநகர் கார்த்தி களமிறங்க இருக்கிறாராம். இவர் சபரீசனின் வலதுகரமாகவும் செயல்படக் கூடியவர்!
திமுகவின் கோட்டையான சென்னையில் தவெகவினர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சபரீசனுக்கு நெருக்கமான அண்ணாநகர் கார்த்திக் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 30 ஆம் தேதி (திங்கள் கிழமை) விஜய் வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினமே தவெகவினர் பெரும்பாலானோர் வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் நாமக்கல் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதேபோல தவெகவின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். திமுக அதிமுகவுக்கு இணையாக தவெகவினரும் அந்தந்த தொகுதிகளில் பரிசுகளை இறக்கி வருகிறார்கள். ஆதவ் வில்லிவாக்கம் தொகுதியில் கவனம் செலுத்தி டேபிள் ஃபேன் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகிறார்.

திமுக கோட்டையான சென்னையை குறித்து தவெகவினர் காய் நகர்த்தி வருகிறார்கள். தவெகவினருக்கு எதிராக திமுகவும் பலமாக திட்டமிட்டுள்ளனர். தவெகவுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை களமிறக்க திமுக திட்டமிட்டு வருகிறார்கள். வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா இரண்டாம் இடத்திற்கு கூட வந்துவிட கூடாது என்று களமாடி வருகிறார்கள்.
வில்லிவாக்கம் தொகுதியில் அண்ணாநகர் எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் மோகன் திமுக வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகனின் மகன் என்கிற அடையாளத்தை கடந்து கார்த்திக், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் நெருக்கமாக இருக்கிறார். திமுகவினர் அவரை அண்ணாநகர் கார்த்தி என்றழைப்பார்கள். சபரீசனுடனான நெருக்கத்தால் அவரும் திமுகவில் ஒரு பவர் சென்டராக உள்ளார்.
சபரீசனின் அஸைன்மென்ட் அடிப்படையில் தான் கார்த்திக் வில்லிவாக்கத்தில் களமிறங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வில்லிவாக்கத்தில் திமுகவினர் தீயாக இறங்கி வேலை பார்க்க தொடங்கியிருக்கிறார்களாம்.
