தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும், 2ஆம் கட்ட வேட்பாளர்களுக்கான பட்டியலை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று 23 வேட்பாளர்களை அறிவித்திருந்தார்.

இன்றைய தினம் 127 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 3ஆம் கட்டமாக வெளியாகும் என தெரிகிறது.

127 வேட்பாளர்கள்!

கும்மிடிப்பூண்டி- சுதாகர், திருத்தணி- கோ.ஹரி, பொன்னேரி- சிறுணியம் பலராமன், திருவள்ளூர்- பி.வி.ரமணா மாதவரம்- மூர்த்தி திருவொற்றியூர்- கே.குப்பன் ஸ்ரீபெரும்புதூர் (தனி)- கே.பழனி தாம்பரம் – சிட்லபாக்கம் ராஜேந்திரன் செங்கல்பட்டு- கஜா என்கிற கஜேந்திரன் செய்யூர் (தனி)- ராஜசேகர் மதுராந்தகம் (தனி)- மரகதம் குமரவேல் காஞ்சிபுரம்- சோமசுந்தரம் அரக்கோணம் (தனி)- சு.ரவி காட்பாடி- ராமு ஆற்காடு– எஸ்.எம். சுகுமார் வேலூர்- எஸ்ஆர்கே அப்பு அணைக்கட்டு – வேலழகன் குடியாத்தம் (தனி)- பரிதா புருஷோத்தமன் வாணியம்பாடி – செந்தில்குமார் ஆம்பூர்- ஆர்.வெங்கடேசன் ஊத்தங்கரை (தனி)- டி.எம்.தமிழ்ச்செல்வம் பர்கூர்- இ.சி. கோவிந்தராசன் கிருஷ்ணகிரி- கே.அசோக்குமார் ஓசூர்- பி.பாலகிருஷ்ண ரெட்டி பாப்பிரெட்டிபட்டி- மரகதம் வெற்றிவேல் அரூர் (தனி)- சம்பத்குமார் செங்கம் (தனி)- டி.எஸ்.வேலு கீழ்பென்னாத்தூர் – எஸ்.ராமசந்திரன் ஆரணி- எல்.ஜெயசுதா

செய்யார்- முக்கூர் சுப்பிரமணியன் வந்தவாசி (தனி)- ராணி திண்டிவனம்(தனி)- அர்ஜுனன் வானூர் (தனி)- பி.முருகன் திருக்கோவிலூர்- எஸ்.பழனிசாமி உளுந்தூர்பேட்டை – குமரகுரு சங்கராபுரம்- ராகேஷ் கள்ளக்குறிச்சி (தனி)- ராஜீவ் காந்தி கங்கவல்லி (தனி)- நல்லதம்பி ஆத்தூர் (தனி)- ஜெயசங்கரன் ஏற்காடு (எஸ்டி)- உஷாராணி ஓமலூர் – ஆர்.மணி மேட்டூர்- ஜி. வெங்கடாசலம் சங்ககிரி- வெற்றிவேல் சேலம் (தெற்கு)- வினோத் வீரபாண்டி- டாக்டர் பாலாஜிசுகுமார் சேந்தமங்லம் (எஸ்டி)- சந்திரசேகரன் நாமக்கல் – ஸ்ரீதேவி பரமத்தி வேலூர்- எஸ். சேகர் திருச்செங்கோடு – ஆர்.சந்திரசேகர் ஈரோடு கிழக்கு- ஆர்.மனோகரன் தாராபுரம் (தனி)- சத்தியபாமா காங்கேயம் – என்எஸ்என் நடராஜ் பெருந்துறை – எஸ்.ஜெயக்குமார் அந்தியூர்- ஹரிபாஸ்கர் கோபிசெட்டிபாளையம்- வி.பி.பிரபு பவானிசாகர் (தனி)- பண்ணாரி கூடலூர் (தனி)- பொன்.ஜெயசீலன் குன்னூர் – ராமு மேட்டுப்பாளையம்- ஓ.கே.சின்னராஜ் திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம்.ஆனந்தன் பல்லடம்- பல்லடம் பரமசிவம் சூலூர்- வி.பி.கந்தசாமி கவுண்டம்பாளையம்- பிஆர்ஜி அருண்குமார் கோயமுத்தூர் தெற்கு – அம்மன் அர்ச்சுணன் சிங்காநல்லூர்- கே.ஆர். ஜெயராம்

கிணத்துக்கடவு- செ.தாமோதரன் பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன் வால்பாறை (தனி)- லட்சுமண சிங் உடுமலைப்பேட்டை – உடுமலை ராதாகிருஷ்ணன் பழனி- ரவி மனோகரன் ஆத்தூர்- விஸ்வநாதன் நிலக்கோட்டை (தனி)- தேன்மொழி வேடசந்தூர்- வி.பி.பி.பரமசிவம் அரவக்குறிச்சி – கே.செல்வக்குமார் கிருஷ்ணராயபுரம் (தனி)- டாக்டர் எஸ் திவ்யா குளித்தலை – எஸ்.கருணாகரன் மணப்பாறை- பி.எல்.விஜயகுமார் ஸ்ரீரங்கம்- ஆர்.மனோகரன் திருச்சி (கிழக்கு)- ராஜசேகரன் திருவெறும்பூர் – ப.குமார் லால்குடி- லீமா ரோஸ் முசிறி- யோகநாதன் துறையூர் (தனி)- இ. சரோஜா பெரம்பலூர் (தனி)- இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் நெய்வேலி- சொரத்தூர் ராஜேந்திரன் பண்ருட்டி- கே.மோகன் கடலூர்- எம்.சி.சம்பத் குறிஞ்சிப்பாடி- புவனேந்திரன் புவனகிரி – அருண்மொழிதேவன் சிதம்பரம்- கே.ஏ.பாண்டியன் சீர்காழ் (தனி)- ம.சக்தி பூம்புகார்- எஸ்.பவுன்ராஜ் நாகப்பட்டினம்- தங்க.கதிரவன் திருத்துறைப்பூண்டி (தனி)- பாலதண்டாயுதம் திருவிடைமருதூர் (தனி)- இளமதி சுப்பிரமணியன் பாபநாசம்- சண்முகபிரபு ஒரத்தநாடு- எம்.சேகர் பட்டுக்கோட்டை- சி.வி.சேகர் பேராபூரணி- கோவி.இளங்கோ திருமயம்- பி.கே.வைரமுத்து சிவகங்கை- பி.ஆர்.செந்தில்நாதன்

மேலூர்- பெரியபுள்ளான் (எ) செல்வம் மதுரை கிழக்கு- மாங்குளம் மகேந்திரன் சோழவந்தான் (தனி)- கி.மாணிக்கம் மதுரை வடக்கு- டாக்டர் பி.சரவணன் உசிலம்பட்டி- ஐ.மகேந்திரன் ஆண்டிப்பட்டி- லோகிராஜன் போடிநாயக்கனூர் – வி.டி.நாராயணசாமி கம்பம் – ஜக்கையன் ஸ்ரீவில்லிபுத்தூர்- சந்திரபிரபா விருதுநகர் – வி.ஜி.கணேசன் அருப்புக்கோட்டை- சேதுபதி பரமக்குடி (தனி)- எஸ்.முத்தையா திருவாடானை- கீர்த்திகா முனியசாமி தூத்துக்குடி – சி.த.செல்லப்பாண்டியன் ஸ்ரீவைகுண்டம்- எஸ்.பி.சண்முகநாதன் சங்கரன்கோவில் (தனி)- திலிபன் ஜெய்சங்கர் கடையநல்லூர்- கிருஷ்ணமுரளி தென்காசி- செல்வமோகன்தாஸ் ஆலங்குளம்- கே.ஆர்.பி. பிரபாகரன் திருநெல்வேலி- தச்சை கணேசராஜா அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா பாளையங்கோட்டை- சையது சுல்தான் சம்சுதீன் கன்னியாகுமரி- தளவாய்சுந்தரம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த வேட்பாளர் பட்டியலில் பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. அதற்கு காரணம் விட்டமின் ‘சி’தான் என்கிறார்கள். அதாவது, 15 ‘சி’ கொடுத்தவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். குறைந்தது தனி தொகுதிக்கு 7 ‘சி’ முதல் 10 ‘சி’ வரை பெறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal